செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (09:47 IST)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் - ஸ்டாலின் !

நேற்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அண்ணா அறிவுக்கொடை 64 என்ற அண்ணாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில்  கலந்து கொண்ட ஸ்டாலின் நுலை வெளியிட்டார்.
இதையடுத்து  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
 
அதிமுகவும் பாமகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வாக்களித்தே நாடு பற்றி எரிய காரணம். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை திமுக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.