தாயின் காலணியால் பரிதாபமாக உயிரிழந்த 6 மாத குழந்தை

per
Last Modified செவ்வாய், 8 மே 2018 (11:44 IST)
உயரமான காலணி அணிந்து சென்று, தாய் கால் தவறி தன் கையிலிருந்து 6 மாத குழந்தையை கீழே விட்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஃபெமிடா ஷாயிக் என்ற பெண் தனது 6 மாத கைக்குழந்தையுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். ஹை ஹீல்ஸ் காலணியை அணிந்திருந்ததால் ஃபெமிடா நடக்க சிரமப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் ஃபெமிடா, தனது குழந்தையுடன் மண்டபத்தின் 2 வது மாடியில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறியதால், கையிலிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது.
baby
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :