வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (08:39 IST)

”சமஸ்கிரதம் பேசினால் ’சுகர்’ வராது..!!! எம்.பி. கூறிய விநோதம்

சமஸ்கிரதம் பேசினால் உடலில் சக்கரை அளவையும், கொழுப்பு அளவும் கட்டுக்குள் இருக்கும் என பாஜக எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் பேசியுள்ளார்.

மக்களவையில் சமஸ்கிருத பல்கலைகழக மசோதா தொடர்பான விவாதத்தில் பாஜக எம்.பி.கணேஷ் சிங் உரையாற்றினார். அப்போது அவர், தினமும் சமஸ்கிரதம் பேசிவந்தால், நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பு அளவும் கட்டுக்குள் வரும் என கூறியுள்ளார்.

மேலும் சமஸ்கிரத மொழியை கொண்டு கம்ப்யூட்டர் பிரோகிராம் உருவாக்கினால் கம்ப்யூட்டரில் எந்த பிரச்சனையும் வராது என நாசா கூறியுள்ளது, இஸ்லாமிய மொழிகள் உட்பட உலகின் 97 சதவீதத்திற்கு அதிகமான மொழிகள் சமஸ்கிரதத்தைத்தை கொண்டு உருவாக்கப்பட்டது தான் எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக பாஜகவினர் சம்ஸ்கிரதமே உலகின் ஆதி மொழி என பேசிவரும் நிலையில், தற்போது பாஜக எம்.பி. இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.