செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (08:11 IST)

இந்தியாவில் 67ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என அச்சம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் 1000 முதல் 3000 பேர்கள் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் தினமும் நூற்றுக்கணக்கில் கொரோனா வைரஸால் உயிரிழந்தும் வருகின்றனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 67,152ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அம்மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 868ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவை குஜராத்தில் 8,194 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் இம்மாநிலத்தில் 493பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா, குஜராத்தை அடுத்து மூன்றாமிடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 7,204 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் 47 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
டெல்லியில் 6,923  கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், ராஜஸ்தானில் 3814 பேர்கள்  கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், மத்தியபிரதேசத்தில் 3614 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், உத்தரபிரதேஅத்தில் 3467 பேர்கள்  கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது