புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (20:37 IST)

எனது போரில் சமரசத்திற்கு இடமில்லை: மோடி காரசார பேச்சு!!

டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.


 
 
ஏழை மக்களுக்காக பிரதமர் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்ய யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
 
இந்த திட்டத்தில் மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், மருத்துவ வசதிகள் ஆகியவையும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். இதற்காக ரூ.16,320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் பின்னர் மக்களிடம் பேசினார் மோடி. அவர் கூறியதாவது, எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தபோது, அதிகாரத்தை அனுபவித்தனர். 
 
எனது ஊழலுக்கு எதிரான எனது போரில் சமரசத்துக்கு இடமில்லை. ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. 
 
மக்களின் நம்பிக்கைக்கும் லட்சியங்களுக்கும் பாஜக மையமாகிவிட்டது. கட்சி தலைவர்கள், மக்களின் பிரச்சனைகளுக்கும் அரசுக்கும் இடையே இணைப்பாக இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.