’வேகத்தடை ‘ மம்தா தூக்கமின்றி தவிக்கிறார் – மேற்கு வங்கத்தில் மோடி !

Last Modified சனி, 20 ஏப்ரல் 2019 (16:01 IST)
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிரமாகப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அங்கு அகதிகள் குடியேறுதல் பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மோடி வேகத்தடை மம்தா பானர்ஜி நடந்து முடிந்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு தூக்கமின்றித் தவிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ’அவர் தொடர்ந்து மண் , மக்கள், மாநிலம் எனக் கூறி ஏமாற்றி வருகிறார். ஆனால் அவருக்காக வங்கதேசத்தில் இருந்து நடிகர்கள் வந்து பிரச்சாரம் செய்கின்றனர். அதற்காக இவர்கள் வெட்கப்படுவதில்லை.  இரண்டு கட்ட தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மம்தா பானார்ஜி தவிக்கிறார். வங்கதேத்தில் இருந்து மேற்குவங்கத்தில் ஊடுருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகள் முடிந்தவுடன் அந்த பணிகள் மும்முரப்படுத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :