வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (08:24 IST)

25 அடி உயர வாஜ்பாய் சிலை: லக்னோவில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அவரது உருவ சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியை நிறுவியவருமான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது இந்த பிறந்தநாளில் லக்னோவில் அவர் பெயரிலேயே மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகளை தொடங்க இருக்கிறார்கள்.

லக்னோவில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிறகு வாஜ்பாய் மருத்துவ பல்கலைகழகத்திற்கான கட்டிட பணிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.