1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (18:05 IST)

ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் ஷூ அணிந்திருந்த அமைச்சர்கள்... கடுப்பான உறவினர்கள்

காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று திவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுண்டரில் அஜய்குமார் என்ற வீரர் உயிரிழந்தார்..
இந்நிலையில்  நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சத்யபால் சிங், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங், மீரட் பாஜக எம்எல்ஏ ராஜேந்திர அகர்வால் ஆகியோர் ஷூ அணிந்தபடி பங்கேற்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவர்களை திட்டும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
 
புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் எரியூட்டப்படுவதற்கான  இறுதிச்சடங்கில்  கலந்து கொண்ட அமைச்சர்கள் தங்கள் ஷூவை கழற்றாமல் கலந்து கொண்டதால் அவர்களிடம் கடிந்துகொண்டதுடன், திட்டியபின் அவர்களை அறிவுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
 
நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த அஜய்குமார் சிங் கடந்த 2011 ஆம் ஆண்டு ராணூவத்தில் சேர்ந்தார். 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. அஜய்குமாரின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரராக இருந்து தேசத்துக்காய் உயிர்த்தியாகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.