1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (16:47 IST)

நயன்தாராவின் ஐரா ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படம், மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 
‘லட்சுமி’ மற்றும் ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கியவர் கே.எம்.சர்ஜுன். இவர் நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் . அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.   கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.
 
‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 
 
ஐரா படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் 28-ம் தேதி ஐரா  படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.