செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (23:26 IST)

YouTube-ல் இருந்து பல லட்சம் வீடியோக்க்ள் நீக்கம்!

இந்த ஆண்டில் இந்தியாவில் யூடியூப்பில் இருந்து பல லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமூக வலைதளங்களில் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது யூடியூப் வலைதளம். இதில், பல லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். பல யூடியூபர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் ம 3  மூன்று மாதங்களில் 11 லட்சத்து 75 ஆயிரத்து 859 வீடியோக்கள் யூடியூப் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைடஹ்ள அமலாக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

உலகில் பிற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிக அளவில் வீடியோக்களை  நீக்கியுள்ளது.