திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 ஜனவரி 2021 (09:21 IST)

கோவாக்சின் போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழப்பு – இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்!

போபாலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் உள்ள மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்து வருகின்றன. சில நிறுவனங்கள் வெற்றிகரமாக கண்டுபிடித்தும் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக அறிவித்தது.

இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. ஆனால் மூன்றாம் கட்ட பரிசோதனை முடியும் முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 42 வயது தீபக் மராவி என்ற நபர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 நாளில் உயிரிழந்துள்ளார். ஆனால் பாரத் பயோடெக் நிறுவனம் அவரின் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அவர் உடலில் விஷம் இருந்ததால் இதயம் முடங்கியதே உயிரிழப்புக்குக் காரணம் என மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.