புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (08:57 IST)

ஹிஜாப் விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மலாலா!

ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா இதுகுறித்து இந்திய தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
பெண்களுடைய ஆடையை முன் வைத்து அவர்களை கல்வி கற்க விடாமல் தடுப்பது அச்சுறுத்தல் என்றும் பெண்களின் ஆடை குறைந்தாலும் கூடினாலும் அது ஏன் பிரச்சனை ஆகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார்
 
மேலும் முஸ்லிம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ள வேண்டாம் என்று இந்திய தலைவர்களை தான் கேட்டுக் கொள்வதாகவும் மலாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்