கால் இல்லாதது பிரச்சினையா? காஷ்மீர் முதல் குமரி வரை சைக்கிளிங்! – சாதனை படைத்த பெண்!
ஒற்றை காலை இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையை நிரூபிக்கும் விதமாக பெண் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை சைக்கிளிங் செய்து சாதித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் தன்யா தாகா. சில வருடங்களுக்கு முன்னால் எதிர்பாராத விபத்து ஒன்றினால் ஒற்றை காலை இழந்த இவரை தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்துள்ளார் இவரது தந்தை. ஏதாவது சாதனை புரிய விரும்பிய இவர் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை சைக்கிளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
காஷ்மீரில் தனது பயணத்தை தொடங்கிய அவர் விடாமுயற்சியுடன் பல தடைகளை எதிர்கொண்டு 42 நாட்கள் பயணத்தில் கன்னியாக்குமரியை வந்தடைந்துள்ளார். அவரது அசாராத தன்னம்பிக்கையுடன் கூடிய சாதனைக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.