திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (09:25 IST)

காதலர் தினம் கொண்டாட சென்ற ஜோடி! பரிதாப பலி! – கோவாவில் சோகம்!

கோவாவில் காதலர் தினம் கொண்டாட சென்ற காதல் ஜோடிகள் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த விபு சர்மா என்பவரும், சுப்ரியா துபே என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். விபு சர்மா டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூரிலும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு அதை கொண்டாடுவதற்காக இருவரும் கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கி பல பகுதிகளை சுற்றி வந்துள்ளனர். காதலர் தினமான நேற்று அவர்கள் கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவருமே அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடம் விரைந்து கடலில் மூழ்கிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். ஆனால் அவர்கள் அதற்கு முன்னரே இறந்திருந்தனர். காதலர் தினத்தை கொண்டாட சென்ற காதலர்கள் அன்றைய தினமே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K