திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (16:40 IST)

இனி அது காதலர் தினம் இல்ல.. பசு அரவணைப்பு தினம்! – விலங்குகள் நல வாரியம் புதிய அறிவிப்பு!

உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதியை தேசிய விலங்குகள் நல வாரியம் பசு அரவணைப்பு தினமாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் சந்தித்து தங்கள் காதலை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த காதலர் தினம் கொண்டாடுவதே மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து இந்தியாவில் பரவி விட்டதாக பலர் குறைபட்டு கொள்வதும் உண்டு.

இந்நிலையில் உலக காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை “பசு அரவணைப்பு தினம்” என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. மேற்கத்திய காலாச்சாரங்களின் வளர்ச்சியால் நமது வேத கால பழக்க வழக்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும், அதனால் நாம் பசுவை அரவணைப்பதன் மூலம் பெருவகை அடைய முடியும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K