புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 டிசம்பர் 2018 (14:25 IST)

ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்திட்டு... மோடியை நக்கலடித்த குஷ்பு

நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு மோடியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு நக்கல் செய்துள்ளார். 
 
அதாவது, ஒரு பாலத்தின் திறப்பு விழாவில் மோடி அந்த பாலத்தின் மீது கையசைத்துக்கொண்டு நடந்து செல்வது போன்ர வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
அந்த வீடியோவோடு, மோடிஜி, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பெருங்கூட்டத்தை பார்த்து கையசைக்கிறீர்களா..? ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தறீங்க. இதுபோல் எத்தனை சுயவிளம்பரங்களை நீங்கள் செய்ய போகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
 
இதைபார்த்த டிவிட்டர்வாசி ஒருவர், மோடி யாருக்கு கை அசைத்தார் என கண்ணாடி போட்டு பாருங்கள் என பதிவிட. அந்த நபரையும் விட்டுவைக்காத குஷ்பு, நான் பதிவிட்ட வீடியோவில் டிரெயின் டிராக் எல்லாம் இருக்கிறது நீங்கள் நன்றாக பாருங்கள் என பதிவிட்டுள்ளார். 
ஒரு விதத்தில் குஷ்பு பதிலளித்திருப்பதும் சரிதான் ஏனென்றால் ரயில் சென்றுக்கொண்டிருக்கும் இடத்தில் மக்கள் அவ்வளவு கூட்டமாக நிற்பது லாஜிக்கே இல்லாத ஒன்றுதான்.