வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (12:23 IST)

கண்ணை நோண்டி, பிறப்புறுப்பை சிதைத்து... கொடூரக்கொலைக்கு கோர்ட் அதிரடி தீர்ப்பு!

கேரளாவில் காதல் விவகாரத்தால் ஆவணக்கொலை செய்யப்பட்ட வழக்கி 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
 
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கெவின் ஜோசப் தனது கல்லூரியில் படித்த நீனு என்ற பெண்ணை காதலொஇத்தார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நீனுவின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நீனுவும் கெவினும் கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர். 
 
இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கெவின் வீட்டை சூறையாடி, அவனை அவனது நண்பன் அனீஷையும் கடத்தி சென்றனர். அனீஷை கடுமையாக தாக்கி பாதி வழியில் இறக்கிவிட்ட நிலையில் மறுநாள் கெவில் கொல்லம் ஓடையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். 
 
கெவினை பலமாக தாக்கியும், பிறப்புறுப்பை சிதைத்தும் ஒரு கண்ணை நோண்டி எடுத்தும் கொடூரமாக கொலை செய்திருந்தனர். கெவின் உறவினர்கள் கொலை செய்ததாக 14 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படியில் விசாரணை துவங்கி 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.40,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அபராத் தொகையில் இருந்து நீனுவுக்கும், கெவின் அப்பாவுக்கும் தலா ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், கெவின் நண்பர் அனீஷுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.