ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:02 IST)

7 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் – ஆசிரியர் தலைமறைவு !

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வயிற்று வலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள மலப்புரம் எனும் பகுதியில் வசிக்கும் அந்த சிறுமி 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவரை பெற்றோர்  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலிஸில் புகார் அளித்துள்ளனர். போலிஸ் விசாரணையில் கடந்த சில மாதங்களாக அந்த மாணவி அவரது ஆசிரியர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தலைமறைவாகியுள்ள அந்த ஆசிரியரைப் போலிஸார் தேடி வருகின்றனர்.