செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (15:46 IST)

கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள் ! கேரள் அரசு அறிவிப்பு !

கோப்புப் படம்

சாதி மறுத்து கலப்புத் திருமணங்கள் செய்து கொண்டு வாழ்வோருக்கான பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

சாதி மற்றும் மதம் மாறி காதலித்து கலப்பு திருமணங்கள் செய்துகொண்டவர்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களால் தாக்கப்படுவதோ அல்லது கொல்லப்படுவதோ அடிக்கடி நடக்கும் சம்பவங்களாக உள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக பாதுகாப்பு இல்லங்கள் கட்டப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

இந்த இல்லங்கள் குறித்து கேரளாவின் சமூக நீதித்துறை அமைச்சர் கே கே ஷைலஜா இன்று சட்டப்பேரவையில் ‘'சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்டவர்கள் புறக்கணிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.  அவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு வரை அவர்கள் தங்கிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் அரசுப் பணியில் இருந்தால் அவர்கள் இடமாற்றம் போன்றவற்றில் சிறப்பு பிரிவில் சேர்க்கப்படுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்கள்.