புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (10:03 IST)

கமல்ஹாசனை மிரட்டுவதா? பொங்கி எழுந்த கேரள முதல்வர்

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நாயகனாகி வருகிறார். அவர் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் கண்டனங்களும், வழக்குகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் தெரிவித்த இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு வழக்கம்போல் கண்டனங்கள் குவிந்து வருகிறது.


 


இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் களமிறங்கியுள்ள நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் ஆதரவு கொடுத்துள்ளார்

கமல்ஹாசனின் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வகையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள இந்து மகா சபை தலைவர்களுக்கு கடும் கண்டனங்கள் என்று பினராயி விஜயன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கமலுக்கு ஆதரவு கொடுத்துள்ள பினரயி விஜயனுக்கு கமல் ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.