நானும் ஒரு தீவிரவாதிதான்: கமலுக்கு பாஜக பிரமுகர் பதிலடி


sivalingam| Last Modified சனி, 4 நவம்பர் 2017 (10:52 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆனந்தவிகடன் இதழில் எழுதிய தொடரான 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்னும் தொடரில் 'இனிமேலும் இந்து தீவிரவாதிகள் இல்லை என்று கூற முடியாது என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதனால் அவர் மீது உபியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
இந்த நிலையில்  பாஜக பிரமுகரும், ராஜ்யசபா உறுப்பினருமான இல.கணேசன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியப்போது, 'தீவிரவாதம் என்பது நல்லவார்த்தை. ஆனால் இப்போது கெட்ட வார்த்தையாக மாறி விட்டது. தேசத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, அந்நிய நாட்டுக்கு ஆதரவாக செயல் படுபவர்களை தீவிரவாதிகள் என்று கூறாமல் பயங்கரவாதிகள் என்றுதான் கூற வேண்டும். மேலும் நானும் கூட இந்து தீவிரவாதி தான்; இந்து மதத்தின் மீது பற்று கொண்ட தீவிரவாதி என்று கூறியுள்ளார்
 
ஏற்கனவே கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி, இந்து முன்னணி தலைவர் அர்ஜூன்சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :