ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஜூலை 2018 (12:21 IST)

பொது மேடையில் கதறி அழுத கர்நாடக முதல்வர் குமாரசாமி

கர்நாடக முதல்வர் குமாரசாமி பொது மேடையில் கதறி அழுத சம்பவம் அக்கட்சி தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக வை தோற்கடிக்க கடைசி நேரத்தில், காங்கிரஸ் - மஜத கூட்டணி வைத்துக் கொண்டு கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார் மஜத தலைவர் குமாரசாமி.
 
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற குமாரசாமி, சமீபத்தில் விவசாயிகளின் 34,000 கோடி கடன்களை அதிரடியாக தள்ளுபடி செய்தார்.
 
இந்நிலையில் பெங்களூர் சேஷாத்ரிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குமாரசாமி,  மங்களூருவில் போராட்டம் நடத்திய பெண்கள் சிலர், தங்களுக்கான முதல்வர் குமாரசாமி அல்ல என கோஷமிட்டனர். இது எனது மனதை மிகவும் புண்படுத்திவிட்டது.
நான் நாட்டு மக்களுக்கு நிறைய நல்லது செய்ய விரும்புகிறேன். ஆனால் மக்கள் இப்படி என்னை விமர்சிப்பது கஷ்டமாக் இருக்கிறது என கூறிய குமாரசாமி, திடீரென தொண்டர்களுக்கிடையே கண்கலங்கினார். தொடர்ந்து பேச முடியாமல் கதறி அழுதார். பின் தன்னை ஆசுவாசப்பத்திக் கொண்டு பேசத் தொடங்கிய அவர் எனது சுய மரியாதையை விட்டுக் கொடுக்கும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பதவியை தூக்கி எறிவேன் என்றார். இதனால் கூட்டத்தில் இருந்த மஜத தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.