வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (19:46 IST)

வாட்ஸ் அப்-ஐ அடுத்து முடங்கியது ஜியோ: அதிர்ச்சியில் பயனர்கள்!

நேற்றுமுன்தினம் இரவு திடீரென வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவை உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் கோடிக்கணக்கான பயனர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஃபேஸ்புக் நிறுவனருக்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் வாட்ஸ் அப்பை அடுத்து தற்போது ஜியோ நெட்வொர்க்கில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மணி நேரங்களாக ஜியோ சேவை முடங்கி உள்ளதாகவும் ஜியோவில் அழைப்பு செல்லவில்லை என்றும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியவில்லை என்றும் ஐயோ பயனாளர்கள் டுவிட்டரில் குற்றஞ்சாட்டி வருகின்றனர் 
 
இதனை அடுத்து ஜியோ நிறுவனம் அளித்த விளக்கத்தில் இந்த முடக்கம் தற்காலிகமானது என்றும் விரைவில் ஜியோ சேவையை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது ஜியோ சேவையின் திடீர் அதன் பயனாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது