இதை செய்யாமல் இருந்தால் ரேஷன் கார்ட் முடக்கம்!
தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகள் முடக்கப்படும் என தகவல்.
ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து அவை அனைத்தும் முடக்கப்படும் என தெரியவந்துள்ளது. ஆம், கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.