அமைச்சர்னா ஆடம்பரமா இருக்கலாமா? இவ்வளவுக்குதான் Phone வாங்கணும்! – முதல்வர் அதிரடி உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!
ஜார்கண்டில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் எவ்வளவு ரூபாய்க்குள் ஃபோன் வாங்க வேண்டும், ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் மாநில ரீதியாக தனி அரசுகள் நடைபெறும் நிலையில் அந்தந்த மாநிலங்களுக்கு என துறை ரீதியாக அமைச்சர்களும் நியமிக்கப்படுகிறார்கள். அப்படியாக நியமிக்கப்படும் அமைச்சர்களில் சிலர் மிகவும் ஆடம்பரமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் உண்டு. அமைச்சர்களின் சொந்த செலவினங்களில் எந்த அரசும் தலையிட்டுக் கொள்வதில்லை.
ஆனால் இதில் வித்தியாசமாக ஜார்கண்ட் அரசு அமைச்சர்கள் தங்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்திக் கொள்வதற்கே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரு அமைச்சர் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய்க்கு போன் வாங்கலாம் என்பதற்கே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜார்காண்ட் மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை மட்டுமே ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும். மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.3000 மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும்
சிறப்பு செயலாளர் நிலை அதிகாரிகள் அதிகபட்சம் ரூ.45 ஆயிரம் வரை செல்போன்கள் வாங்கலாம். மாத ரீசார்ஜ் ரூ.2000க்குள் இருக்க வேண்டும். கூடுதல் இயக்குனர்கள், செயலாளர்கள் அதிகபட்சம் ரூ.30 ஆயிரத்திற்குள் செல்போன் வாங்கலாம். மாத ரீசார்ஜ் ரூ.750ஐ தாண்ட கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K