வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (09:55 IST)

எனது உடலை காவித்துணியால் மூடுங்கள் – துப்பாக்கியால் சுட்ட இளைஞர் வீடியோ!

டெல்லியில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் தனது உடலை காவித்துணியால் மூட வேண்டும் என பேசி வீடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜாமியா பல்கலைகழகம் முன்னால் மாணவர்கள் சிலர் பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென மாணவர்கள் பேரணிக்குள் நுழைந்த இளைஞர் “உங்களுக்கு சுதந்திரம்தானே வேண்டும் வாங்கி கொள்ளுங்கள்” என்று கூறியபடி மாணவர்களை நோக்கி சுட்டிருக்கிறார். இதில் மாணவர் ஒருவருக்கு கையில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அவர் முன்னரே திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. நேற்று முன் தினம் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நபர் ”தனது இறுதி சடங்கில் தன்னை காவித்துணியால் மூட வேண்டும் என்றும், ராமரை பாட வேண்டும் என்றும்” பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது. இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா கூறியுள்ளார்.