புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (19:29 IST)

ரிசர்வ் வங்கியா? மோடி வங்கியா? சென்னை பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்

திமுக தலைவர் கருணாநிதியின் சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தற்போது மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் இதுவரை பேசியதாவது:

நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் இன்று முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள்

வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு கொண்டுருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதுமட்டுமின்றி தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி

கருணாநிதியை நினைவில் வைத்து தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசை அனுமதிக்க கூடாது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசி வருகிறார்