வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 மே 2024 (16:41 IST)

வெயில் கொடுமையா..? வெங்காயத்தை பையில வெச்சுக்கோங்க! – அமைச்சர் சொன்ன அடேங்கப்பா டிப்ஸ்!

Jyodhirathittya Scindiya
நாடு முழுவதும் கோடைக்கால வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கோடை வெயிலில் இருந்து விடுபட மத்திய அமைச்சர் சொன்ன டிப்ஸ் வைரலாகியுள்ளது.



கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்தியா முழுவதுமே கோடை வெயில் வாட்டி வருகிறது. இதற்கிடையே பல கட்டங்களாக மக்களவை தேர்தலும் நடந்து வருகிறது. நேற்று மக்களவை 3ம் கட்ட தேர்தல் பல மாநிலங்களிலும் நடைபெற்றது.

மத்திய அமைச்சரவையில் ஏவியேஷன் அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் பாஜக சார்பில் மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று குணா தொகுதியிலும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளை அப்போது அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பார்வையிட்டார்.


அப்போது அவரை சூழ்ந்துக் கொண்ட செய்தியாளர்கள் நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சிம்பிளாக அவர் பையில் இருந்து ஒரு வெங்காயத்தை எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் உங்கள் பாக்கெட்டில் ஒரு வெங்காயம் இருந்தால் வெயிலை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் வெங்காயத்தை கையிலோ, பையிலோ வைத்துக் கொண்டால் உடல் வெப்பநிலை குறையும் என்று எந்த நிரூபணமும் இல்லாத சூழலில் அவரது இந்த வெயில் டிப்ஸ் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K