திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (16:03 IST)

நாட்டில் ‘கோழி முட்டையை’ வைத்து அரசியல் பேசும் நேரமா இது ?

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவே அங்கும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.  இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான பார்கவா, முட்டை சாப்பிடாத குழந்தைகளை கட்டாயப்படுத்துவதாக உள்ளது, அவர்களுக்கு இறைச்சியையும் சேர்த்துக் கொடுங்கள்  என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆளும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாவது : முட்டை சாப்பிடாத குழதைகளை கட்டாயப்படுத்துவதாக உள்ளது அவர்களுக்கு இறைச்சியையும் சேர்த்துக் கொடுங்கள். ஆனால் நமது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று எச்சரித்துள்ளனர்.
 
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அதில், பாஜக ஆளும் சில மாநிலங்களிலும் இதேபோல் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை அளிக்கப்படுகிறது. அதனால் மாமிசம் சாப்பிடுவர்கள் எல்லாம் நரமாமிசம் சாப்பிடுபவர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியர்களுமே சைவத்தின்பால் விருப்பம் கொண்டவர்களும்,  அசைவத்தின்பால் விருப்பம் கொண்டவர்களும்  உள்ளனர். 
அரசு செய்வதைச் செய்யும், அதை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்,  ஏற்காதவர்கள் விலகி இருக்கட்டும். ஆனால் குட்டையை கலைத்தது போல் பாஜக மூத்த தலைவர் பார்கவா பேசியுள்ளது நாட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.
 
மாணவர்களுக்கு உடலில் சத்து கொடுப்பதற்கும், அவர்கள் வீட்டில் தேவையான பொருளாதாரம் இல்லாததால் அவர்கள் படிக்க முடியாத சூல்நிலை ஏற்படும் எனக் கருதி அரசு பள்ளிகளில் இந்த சத்துணவு ஏற்பாட்டை செய்கிறது. அதிலும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் செய்தபடி தான் உள்ளனர்.
 
இந்நிலையில் மக்களின் தேவையை, மாணவர்களின் தேவையை, ஏழைகளின் தேவையை அறிந்து அரசியல்தலைவர்கள் பேசினால் நாட்டில் எந்தக் குழப்பத்திற்கும் இடம் எழாது.
 
நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது. அதைவிடுத்து இப்போது மாணவர்களுக்கு வழங்க்கப்படும் சத்துணவு முட்டையின் மீதுதான் கண்ணை உறுத்துகிறதா? எனஅரசியல் விமர்சகர்கள் காரம்சாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
நாட்டில் எம்பி நிற்கும் போதாமைகளின் மீது அரசியல் தலைவர்களின் பார்வை  சென்றால், நாட்டில் வல்லரசுக்கான சுபிட்சம் தொடரும் நிலை உருவாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.