1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 6 மே 2024 (20:38 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பா.? என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை..!

ஆம் ஆத்மி கட்சி நடத்துவதற்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு நிதி அளிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். 
 
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.
 
தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சமயம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க பரிந்துரைக்கலாமே என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது. இது குறித்து பதில் அளிக்க அமலாக்கதுறைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சீக்கியர்களுக்கான நீதி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரைத்துள்ளார்.


நாளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநரின் இந்த பரிந்துரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.