புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (12:57 IST)

2019ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் - உடனுக்குடன்

2019-2020 நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல் தற்பொழுது  தாக்கல் செய்து வருகிறார்.
 
வழக்கமாக நிதியமைச்சரே பட்ஜெட் தாக்கல் செய்வார். ஆனால் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதால் இடைக்கால நிதியமைச்சரான பியூஷ் கோயல் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இந்நிலையில், பட்ஜெட் குறித்த செய்திகளை வெப்துனியா உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறது.

எதிர்கட்சிகளின் அமளிக்கிடையே பியூஷ் கோயல் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளோம்.
 
வங்கித்துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன.
 
எந்த ஆட்சியிலும் எட்டப்படாத வளர்ச்சி மோடி தலைமயிலான ஆட்சியில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
 
உலகின் மிக முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளது

 
பணவீக்க விகிதத்தை 4.4 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
 
நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7 சதவிகித்த்துக்கு மேல் இருக்கும் எனக் கணிப்பு.
 
பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலை மாறி, இப்போது மிகவும் குறைந்துள்ளது.

பெரிய தொழிலதிபர்கள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்
2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்: பியூஷ் கோயல்
 
நிதி பற்றாக்குறை 6 சதகிதத்திலிருந்து 3 சதவீதமாக குறைந்துள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சியில் 11 ஆவது இடத்திலிருந்து 6 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
 
 
நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடந்துள்ளது.
 
ரூ.3 லட்சம் வரையிலான வராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.
 
கட்டுமானத் துறை சட்டம், பினாமி தடுப்பு சட்டம் ஆகியவை ஊழலைத் தடுத்துள்ளது.
 
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
தூய்மை இந்தயா திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிக்கும் நிலை மாற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட இதுக்கீடு வழங்க கல்வி நிறுவனங்களில் இடங்கள் அதிகரிப்பு.
இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத என்ற நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.

குறைந்த விலையிலான 14.3 கோடி எல்.இ.டி விளக்குகள் மக்களுக்கு விநியோகம்.

எல்.எ.டி பல்புகள் மூலம் 50 ஆயிரம் கோடி சேமிப்பு
 
ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மேலும், இன்னும் தேவைப்பட்டால் நிதி ஒதுக்கப்படும்.

ஹரியானாவில் நாட்டின் 22வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்
 
நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிராமங்களிலும் கிடைக்க நடவடிக்கை
 
ஆயிஷ்மான் பாரத் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு எனும் சிறப்புத் திட்டம்

கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்

விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்

4 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது

மாதம் 15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் பெறுவோருக்கு மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

 
2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்படும்.
 
ரூ. 5 ஆயிரம் திகை மூன்று தவனையாக தலா ரூ. 2 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும்.
 
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
 
பிரதமரின் விவசாயிகள் உதவி நிதி திட்டம் மூலம் 12 கோடி சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயன்பெறுவர்.
 
மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம்.
 
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம்.
 
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 10%லிருந்து 14% ஆக உயர்த்தப்படும்

கால்நடை, மீன் வளர்ப்புத் துறையில் கடனை சரியான நேரத்தில் கட்டினால் 3% வட்டி சலுகை

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் 3000 வழங்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பணிசெய்யும் பெண்களுக்கு 26 வார கால மகப்பேரு விடுப்பு
அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம். இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் 10 கோடி பேர் பயன்பெறுவர்.
 
பி.எஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ. 6 லட்சமாக உயர்வு.
 
அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு மதிப்பூதியம் 50% அளவுக்கு உயர்வு.
 
தொழிலாளர்களுக்கான பணிக்கொடை வரம்பு 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்வு.
 
மாதம் ரூ. 15 ஆயிரத்திற்கு கீழ் ஊதியம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.
 
முத்ரா திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்களில் 70% பேர் பெண்கள்.

ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்திற்கு ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
 
1 கோடி வரையிலான கடன்களுக்கு 3% வட்டி கழிவு வழங்கப்படும்.
 
கடந்த ஆண்டு ரயில் விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன.
 
நெடுஞ்சாலைகளை அமைப்பதில் உலகிலேயே மிகவேகமான நாடு இந்தியா.
 
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெர்றவர்களில் 70% பேர் பெண்கள். முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
 
விமானத்துறையில் வேகமான வளர்ச்சி இருப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு.
 
கடந்த 5 ஆண்டுகளில் 34 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
 
வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
 
சூரிய சக்தி மின்சார உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது.
 

ராணுவத்திற்கு 3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு

மொபைல் டேட்டா பயன்பாடு  50 மடங்கு அதிகரிப்பு

ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை, உச்சவரம்பு 2.50 லட்சமாக தொடரும்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1.03 லட்சம் கோடி கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் கோடி கணக்கில் வராத சொத்துக்கள் கண்டறியப்பட்டன, 6900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்  வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட 1600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3.38 லட்சம் போலி கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வித் திட்டத்திற்கு 38.572 கோடி நிதி

மத்திய அரசின் திட்டங்களுக்கு 3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
செல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 268 ஆக அதிகரிப்பு.
 
ரயில்வே துறைக்கு 64,587 கோடி நிதி ஒதுக்கீடு.
 
ஜிஎஸ்டி முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
 
உலகிலேயே டேட்டாவுக்கு மிகக் குறைந்த கட்டணங்கள் கொண்ட நாடு இந்தியா மட்டுமே

திருத்தம்: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 2.50 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரிப்பு
 
பொருளாதாரத்தில் மேம்பாடு டிஜிட்டல் இந்தியா, உள்கட்டமைப்பில் தன்னிறைவு, சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றுக்கு இலக்கு.
 
ஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இலக்குகள் நிர்ணயம்.
 
2030க்குள் 10 அம்சங்களுக்கான இலக்குகளை இந்தியா அடையும்.
 
திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றைச்சாளர முறை கடைபிடிக்கப்படும்.
 
எஸ்.சி, எஸ்.டி நலத்துறைக்கு 76,000 கோடி.
 
அடுத்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குற் 3.5% ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
 
நடப்பாண்டில் அரசின் பங்குகளை 80,000 கோடிக்கு விற்க முடிவு.

வருமான வரி விலக்கு உச்சவரம்பால் 3 கோடி பேர் பயன்பெறுவர்

ஒட்டுமொத்த வருமான வரிச்சலுகை மூலம் 6.25 லட்சம் வருமானம் பெறுவோர் கூட வருமான வரி செலுத்த வேண்டி இருக்காது

டெபாசிட்டில் கிடைக்கும் 50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வட்டிப்பிடித்தம் இல்லை

நிரந்தர கழிவு 50 ஆயிரமாக அதிகரிப்பு. நிரந்தரக் கழிவுக்கான வரம்பு ரூ. 50 ஆயிரமாக உயர்வு.
 
தனி நபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து நிரந்தர கழிவு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்வு.
 
வீட்டுக் கடன் சலுகை: வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்.
 
மாத வாடகை மூலம் வரும் வரிக்கான விலக்கு ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்வு.
 
வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1,80,000-லிருந்து ரூ. 2,40,000 ஆக உயர்வு.