புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (09:09 IST)

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு பக்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கர்நாடகாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும், கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran