ஒற்றுமைக்கான புதிய விருது: சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது!
இந்திய நாட்டில் பல்வேறு சாதனைகளுக்காக பல விருதுகளை அளித்து வரும் நிலையில் புதியதாக ஒரு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை வலியுறுத்தும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் அமைதிக்கான விருதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சுதந்திர இந்தியாவை ஒரே நாடாக மாற்றவும், அனைவரையும் இந்தியராய் ஒருங்கிணைக்கவும் பாடுபாட்ட சர்தார் வல்லபாய் படேலின் பெயரை அந்த விருதுக்கு சூட்டியுள்ளார்கள்.
சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை விருது என்று அழைக்கப்படும் இந்த விருது நாட்டின் அமைதிக்காக சேவை செய்பவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட இருக்கிறது. இது மத்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு இணையானது என்று கூறப்படுகிறது.