திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (17:06 IST)

ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்இ 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியா முழுதுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
இந்த வருடம் தொடக்கத்தில் பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படு வருகிறது.

சமீபத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ஐசிஎஸ் இ மற்றும் ஐஎஸ் இ 10 மற்றூம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்ள் ரத்து செய்யப்பட்டன.

பின்னர் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது,.

இந்நிலையில், ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு முடிவுகளை மாணவர்கள், cisce.org or results.cisce.org. என்ற இணையதளங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்த ஆண்டில் ஐசிஎஸ் இ மற்றும் ஐஎஸ் இ வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்  கிடைக்காது என ஐஎஸ்சி இ தலைமை நிர்வாக  இயகுநர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.