மறைந்து வரும் காவிமயம்: இந்திய மேப்பில் மாற்றம்

Last Modified வெள்ளி, 14 டிசம்பர் 2018 (08:54 IST)
கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவுடன், இந்திய மேப்பில் பெரும்பாலான இடங்களில் காவி நிறமே இருந்தது. அதாவது பாஜக 19 மாநிலங்களில் ஆட்சியை தனித்தும், கூட்டணி கட்சிகளின் உதவியோடும் கைப்பற்றி இருந்தது.

ஆனால் 2018ஆம் ஆண்டு பாஜகவுக்கு இறங்குமாக இருந்தது. ஆந்திராவில் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேச கட்சியின் விலகல், காஷ்மீரில் பிடிபி கட்சி விலகல், சமீபத்தில் முடிந்த ஐந்து மாநில தேர்தல் தோல்வி ஆகியவைகளுக்கு பின் பாஜக தற்போது மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இதே ரீதியில் போனால் அடுத்த ஆண்டு இன்னும் மாநிலங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய மேப்பில் காவி மயம் மறைந்து வருவதால் உடனடியாக அந்த கட்சி சுதாரிக்க வேண்டிய நேரமிது.


இப்போதைய பாஜக தொண்டர்களின் மனநிலைப்படி மோடிக்கு பதிலாக வேறொரு பிரதமர் வேட்பாளரும், அமித்ஷாவுக்கு பதிலாக வேறொரு பாஜக தலைவரையும் அறிவிக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கிவிட்டது. புதிய தலைவர், புதிய பிரதமர் வேட்பாளருடன் பாஜக இனிவரும் தேர்தலில் களமிறங்கினால் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :