1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (20:27 IST)

பாஜக-வை வீழ்த்தி நோடா-விடம் வீழ்ந்த காங்கிரஸ்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மரண அடியாக அமைந்துள்ளது. காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி வெற்றியை கொண்டாடி வருகிறது. ஆனால், நோடாவிடம் வீழ்ந்துள்ளது. 
 
ஆம், மத்திய பிரதேசத்தில் மூன்று தொகுதிகளில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகளை விட குறைந்த அளவு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
 
5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்த வாக்குகளில் 1.5% நோட்டாவிற்கு விழுந்துள்ளது. சத்தீஸ்கரில் 2%, ராஜஸ்தானில் 1.3%, தெலங்கானா 1.1%, மத்திய பிரதேசத்தில் 0.4% மற்றும் மிசோரமில் 0.5% என்பது புள்ளி விவரம். 
 
இவற்றில், மத்திய பிரதேசத்தில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகளை விட குறைந்த அளவு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர் தோல்வி அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.