வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:52 IST)

பார்வை மாற்றுத்திறனாளிக்கு ரூ.47 லட்சம் ஊதியத்துடன் வேலை: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

microsoft job
பார்வை மாற்றுத்திறனாளிக்கு ரூ.47 லட்சம் ஊதியத்துடன் வேலை: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆண்டுக்கு 45 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 ஒவ்வொரு இளைஞரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள் என்பதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மின்பொறியாளர் யஷ் என்பவருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 45 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் மைக்ரோசாப்ட் வேலை கிடைத்துள்ளது.
 
இதுகுறித்து யஷ் கூறிய போது ’திரைவாசிப்பு மென்பொருள் உதவியுடன் என்னுடைய கல்வியை பெற்றேன் என்றும் இலக்கை சாதிக்க உடலிலுள்ள குறைபாடுகள் தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.