1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (10:22 IST)

சொத்துக்களை பராமரிக்க 82 வயதில் திருமணம் செய்து கொண்ட தாத்தா

தனக்கு பிறகு சொத்துக்களை பராமரிக்க யாருமில்லை என்பதால், முதியவர் ஒருவர் தனது 82 வது வயதில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுக்ராம் பைரவா(83). இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது ஆண் மகன் இறந்து விட்டார். பைரவாவிற்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் அதனை தனக்கு பிறகு யார் கவனித்துக் கொள்வது என யோசித்து 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார்.
 
இந்நிலையில் முதல் மனைவியின் சம்மதத்தோடு, பைரவா தற்பொழுது 30 வயது பெண்மணியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் முதல் மனைவியை விவாகரத்து பெறாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், பைரவாவின் இரண்டாவது திருமணம் செல்லாது என சலசலப்பு ஏற்பட்டுள்ளது.