திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 டிசம்பர் 2020 (08:38 IST)

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது – மாநில அரசு உத்தரவு!

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் டிஷர்ட் அணியக்கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களின் புதிய ஆடை விதிப்படி,  பணியில் இருக்கும் போது ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட் அணியக்கூடாது. மோசமான செருப்புகளை அணியக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் மோசமான பெயரை மாற்ற முடியும் எனவும் கூறியுள்ளது.பெண் ஊழியர்கள் புடவைகள், சல்வார், சுடிதார், குர்தா, பேண்ட் - சட்டைகளை துப்பாட்டாக்களுடன் அணியலாம் எனவும் கூறியுள்ளது.