புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:24 IST)

100% பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 100% பயணிகளுடன் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
 
கொரோனா காரணமாக தற்போது 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள மத்திய அரசு வரும் 18ஆம் தேதி முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.