புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (16:07 IST)

ரூ.9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரிஸ் பறிமுதல்!

ரூ.9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரிஸ் பறிமுதல்!
தங்கத்தை விட விலை மதிப்பானது என்று கூறப்படும் திமிங்கலத்தின் வாயிலிருந்து வரும் திரவம் ஆம்பர்கிரிஸ் கடத்தும் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது 
 
ஆம்பர்கிரிஸ் என்ற சொல்லக்கூடிய இந்த பொருளை மிக அதிக விலைக்கு சந்தையில் விற்பனையாவதால் இதனை கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரூபாய் 9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரிஸ் மகாராஷ்டிர மாநில காவல்துறை பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமிங்கலத்தின் வயிற்றில் உருவாகி அதனால் வெளியேற்றப்பட்ட மெழுகுபோன்ற இந்த பொருள் தான் ஆம்பர்கிரிஸ் என்று கூறப்படுவதுண்டு. மருந்து தயாரிக்கும் மிக மிக விலை உயர்ந்த வாசனை திரவம் தயாரிக்கவும் ஆம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது
 
சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ஆம்பர்கிரிஸ் விலை ரூபாய் ஒரு கோடி என விற்கப்படுவதால் இதற்கு மிகவும் மதிப்பு அதிகம். திமிங்கலத்தை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளதால் ஆம்பர்கிரிஸ் வைத்திருப்பதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  மும்பையில் சட்டவிரோதமாக 9 கிலோ ஆம்பர்கிரிஸ் வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்