புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (22:40 IST)

பக்கத்துவீட்டு பையனுடன் காதல்: கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது மகள் பக்கத்துவீட்டு பையனுடன் காதல் செய்வதை கண்டு ஆத்திரமடைந்த தந்தை, மகள் என்றும் பாராமல் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சர்துர்பூர் என்ற கிராமத்தில் குமார் என்பவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கடைசி மகள் 22 வய பூஜாஸ்ரீ. எம்.ஏ படித்து வரும் இவருக்கும் பக்கத்து வீட்டிலிருந்த கஜேந்திரா என்ற பையனுக்கும் முதலில் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது
 
இதனை கண்டித்த தந்தை குமார், இனிமேல் பக்கத்துவீட்டு பையனுடன் பேசக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். இருப்பினும் தந்தையின் கண்டிப்பையும் மீறி கஜேந்திராவுடன் பூஜா அவ்வப்போது பேசிக் கொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கஜேந்திராவுடன் பூஜா பேசுவதை நேரில் கண்ட குமார் ஆத்திரமடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சொந்த மகள் என்றும் பாராமல் கத்தியை எடுத்து அவருடைய கழுத்தை அறுத்து விட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த பூஜா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் 
 
இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த பூஜாவின் தாயார் மற்றும் சகோதரர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூஜா மரணமடைந்து பிணமாக இருந்தார். இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பின் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
பக்கத்து வீட்டு பையன் கஜேந்திரன் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் காதலை கண்மூடித்தனமாக எதிர்த்ததால் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை பரிதாபமாக பலியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது