1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (13:04 IST)

இறந்த மகள் திரும்பி வர பிராத்தனை – மூன்று நாட்களாக உடலை புதைக்காத குடும்பத்தினர் !

உத்தர பிரதேச மாநிலத்தில் காய்ச்சலால் இறந்த குழந்தையை உயிருடன் திரும்ப கொண்டுவர மூன்று நாட்களாக பிராத்தனை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் மவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் வன்வாசி என்ற குடும்பஸ்தர். இவரின் 4 வயது மகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் வயப்பட்டது. சிகிச்சை பலனளிக்காத அந்த குழந்தை கடந்த 14 ஆம் தேதி இறந்துள்ளது.

இதனால் சோகமான வன்வாசி தனது மகளைப் புதைக்காமல் வீட்டில் இருந்த இயேசுநாதரின் புகைப்படத்துக்கு முன் குழந்தையின் உடலை வைத்து பிராத்தனை செய்ய ஆரம்பித்துள்ளார். அவரைப்பார்த்து அவரது குடும்பத்தினரும் அதுபோல செய்துள்ளனர். அப்படி பிராத்தனை செய்தால் மகள் உயிரோடு வருவாள் என நம்பியுள்ளனர்.

இப்படியே 3 நாட்களாக உயிரில்லாத மகள் உடலோடு பிராத்தனை செய்துள்ளனர். நாட்கள் ஆனதும் உடலில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்க சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிஸுக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து குடும்பத்தினரை சமாதானம் சொல்லி குழந்தையைப் புதைத்துள்ளனர்.

இந்த மூடநம்பிக்கைத்தனமான குடும்பத்தினரின் பிராத்தனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.