வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:37 IST)

என் மேல் பேப்பர் கட்டை தூக்கி அடித்தார்கள் – குமாரசாமி குமுறல்

நான் ஆட்சியில் இருந்த காலத்தில் காங்கிரஸ் என்னை ஒரு அடிமை போல நடத்தியது என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 14 மாதங்களாக காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி செய்தவர் குமாரசாமி. அவரது கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 15 பேர் அதிருப்தியால் பதவி விலகினார்கள். இதனால் குமாரசாமி ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை காரணமாக கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கான காரணங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் “நான் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்தேன். ஆனால் காங்கிரஸ் என்னை ஒரு கிளார்க் போல நடத்தினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ என் முகத்தில் பேப்பர் கட்டை வீசி அவமானப்படுத்தினார். எனக்கு அரசியல் என்றாலே வெறுப்பாகிவிட்டது. லட்சக்கணக்கான தொண்டர்களுக்காகவே விலகி செல்லாமல் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.