1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:05 IST)

காசநோய் பாதித்த சிறுமியை தத்தெடுத்த கவர்னர் – பிரதமர் மோடி சொன்னது காரணமா?

உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை தத்தெடுத்துள்ள சம்பவம் இந்தியாவெங்கும் விமரிசையாக பேசப்படுகிறது.

மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்தவர் ஆனந்திபென் படேல். இவர் சமீபத்தில் உத்தர பிரதேச மாநில கவர்னராக பணி நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பேற்ற நாள் முதல் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆனந்திபென் தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை தத்தெடுத்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று பேசிய போது இந்தியாவில் காசநோயை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசியிருந்தார். அதை குறிப்பிட்டு பேசிய ஆனந்திபென் “தற்போது இந்த தத்தெடுப்பின் மூலம் பாதிக்கப்பட குழந்தைக்கு சரியான மற்றும் சத்தான உணவை வழங்க முடியும். இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளரவும் காசநோய் குணமடையவும் வாய்ப்புள்ளது” என்று பேசியுள்ளார்.

ஆனந்திபெல் மட்டுமல்லாம் அவரது கவர்னர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளும் 21 காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார்கள்.