1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 மார்ச் 2018 (14:01 IST)

உயில் எழுதி வைத்த ரசிகை - அதிர்ந்து போன சஞ்சய் தத்

சமீபத்தில் மரணமடைந்த ஒரு பெண் தனது பணம் மற்றும் பொருட்களை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

 
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, 5 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின், கடந்த 2016ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், மும்பையில் ஒரு பெண் தனது பணம் மற்றும் பொருட்கள்  அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி விட்டு மரணம் அடைந்த சம்பவ வெளியே தெரிய வந்துள்ளது.
 
மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திர என்கிற பெண் தீவிர சஞ்சய் தத் ரசிகராவார். தனது தாயுடன் வசித்து வந்த அவர் நோய் வாய்ப்பட்டு சமீபத்தில் மரணமடைந்தார். அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கர்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, வங்கி கணக்கில் இருக்கும் பணம் மற்றும் லாக்கரில் உள்ள அனைத்து பொருட்களும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என அவர் உயில் எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
 
இந்த தகவலை அவர்கள் கூற, இப்படி ஒரு ரசிகையா என அதிர்ச்சியடைந்த சஞ்சய் தத், அவரின் அன்பில் நெகிழ்ந்து போனாராம். மேலும், அவரின் பணம் மற்றும் பொருட்களை அப்பெண்ணின் குடும்பத்தினரிடமே கொடுத்து விட ஏற்பாடு செய்தாராம்.