எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார் ரஜினி

Last Modified திங்கள், 5 மார்ச் 2018 (17:59 IST)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அருகே உள்ள கல்லூரியில் சற்றுமுன் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். அவரது வருகையை முன்னிட்டு இந்த விழாவில் ரஜினியின் ஏராளமான ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அரசியல் அறிவிப்பு குறித்த அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் பொதுநிகழ்ச்சி என்பதால் இந்த விழாவில் ரஜினிகாந்த் அவர்களின் மாஸ் உரை இருக்கும் என்றும், அவரை பற்றி மறைமுகமாக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலடியாக அவரது உரை இருக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்

ரஜினியின் உரையில் என்ன இருக்கும் என்பதை அறிய தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி தேசிய ஊடகங்களும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர். இந்தநிகழ்ச்சியில் இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிறிது நேரத்தில் ரஜினி என்ன பேசினார் என்பதை பார்ப்போம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :