புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (19:50 IST)

பாஜகவில் இணைந்த பிரபல நடிகர் : தொண்டர்கள் கொண்டாட்டம்

ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள சன்னி தியோல் இன்று பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான தர்மேந்திராவின் மகன்தான் சன்னி தியோல், தர்மேந்திரா பாஜக கட்சி சார்பில் கடந்த 2004 ஆம் ஆண்டி நடந்த தேர்தலில் வென்றார்.
 
தற்போது தர்மேந்திராவின் மனைவின் மனைவி ஹேமாமாலினியும் பாஜக சார்பில் மதுராவில் போட்டியிடுகிறார்.  
இந்நிலையில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று சன்னி தியோல் பாஜகவில் இணைந்தார். இதனை அறிந்த பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 
இதற்கு முன்னதாக  அவர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.