திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (16:27 IST)

இளம்பெண்ணை தியேட்டரில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்த பேஸ்புக் நண்பன்!

ஐதராபாத்தில் பேஸ்புக் மூலமாக நண்பனான ஒருவருடன் இளம்பெண் ஒருவர் படம் பார்க்க சென்றதில், அவர் அந்த நபரால் கொடூரமாக தியேட்டரில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட நம்பவம் நடந்துள்ளது.
 
சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக 19 வயது இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் அறிமுகமாகியுள்ளனர். இந்த நட்பு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இருவரும் சேர்ந்து பத்மாவத் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளனர். ஆனால் தியேட்டரில் அதிக கூட்டம் இல்லாததை பார்த்து அந்த இளைஞன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதில் அந்த பெண்ணின் அந்தரங்க உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் புகாரையடுத்து இந்த பலாத்கார செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 376-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்துக்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.