செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:30 IST)

ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு..! ஏப்.16 வரை நீட்டித்து உத்தரவு..!

Sabar Sadiq
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்பட ஐந்து பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலயா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.
 
இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்.சி.பி.) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் ஜாபர் சாதிக், சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரின்  நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக்கு உட்பட ஐந்து பேரின்  காவலை ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

 
இதனிடையே போதைப்பொருள் கடத்தலில் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் நேரில் ஆஜராகமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.